Wednesday

TET Study Materials in Tamil - காந்திஜியின் கல்வி சிந்தனைகள்

 

 காந்திஜியின் கல்வி சிந்தனைகள்

காந்திஜியின் வாழ்க்கைக் குறிப்பு

v  மகாத்மா காந்தியின் இயற்பெயர் மோகன்சந்த் கரம்சந்த் காந்தி.

 

v  1869 ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 2 ம் நாள் குஜராத்தில் உள்ள போர்பந்தரில் பிறந்தார்.

 

v  18 ம் வயதில் மெட்ரிகுலேஷன் தேர்வில் வெற்றி பெற்றார்.பின் இங்கிலாந்து நாட்டுக்கு சென்று மேற்படிப்பு படித்தார்.

 

v  அங்கு சென்று பாரிஸ்டர் படிப்பு படித்து தேர்ச்சி பெற்ற பின் தாய்நாட்டிற்கு திருப்பினர்.

 

v  அதன் பின் பம்பாயில் தொழில்புரிய ஆரம்பித்தார்.1893 ல் தொழில் தொடர்பாக தென்னாப்பிரிக்காவில் உள்ள டர்பனுக்கு சென்றார்.

 

v  தென்னாப்பிரிக்காவில் 2௦ ஆண்டுகளுக்கு மேலாக தங்கி இருந்தார்.அப்போது அங்கு இந்தியர்களுக்கு நடந்த இழிவுகளை எதிர்த்து போராட்டம் நடத்தினார்.

 

v  பின் 1894 ல் நேடால் இந்திய காங்கிரஸை நிறுவினார்.

 

v  தென்னாப்பிரிக்காவில் உள்ள டிரான்ஸ்வல் என்னும் இடத்தில் அமைந்துள்ள டால்ஸ்டாய் என்ற பண்ணையில் தனது மகன்களுக்கும் பிற குழந்தைகளுக்கும் கல்வி அளித்தார்.

 

v  அதன்மூலம் அவருக்கு கல்வியின் மேல் ஆர்வம் எழுந்தது.அங்கு பயின்ற மாணவர்கள் எட்டு மணி நேரம் தொழிற்பயிர்சியையும் இரண்டு மணி நேரம் மட்டுமே புத்தகப் படிப்பை மேற்கொண்டனர்.இதன்மூலம் காந்திஜி பெரும் புகழ் பெற்றார்.

 

v  1914 ல் இந்திய திரும்பி வார்தாவிலிருந்து 11 மைல் தொலைவில் அமைந்த சேவாகிராமம் என்ற இடத்தில் ஆசிரமம் ஒன்று நிறுவி அங்கு கல்வி சோதனையை தொடங்கினார்.

 

v  இவரது ‘‘எனது சத்திய சோதனை’’ என்னும் நூல் அவருடைய வாழ்க்கையும் போராட்டத்தையும் விளக்குகிறது.

 

v  1948 ம் ஆண்டு ஜனவரி திங்கள் 3௦ ம் நாள் இயற்கை எய்தினார்.

 

 

காந்திஜியும்,ஆதாரக் கல்வியும்

 

v  இந்தியாவில் உள்ள மக்கள் வறுமையில் வாழ்க்கைப் போராட்டத்தை நடத்தி வருவதைக் கண்டு கல்வியை குறைந்த செலவுடனும், மாணவர்களை சுயதொழில் செய்யவும், சுய சார்புடையவராக இயங்கவும் உதவும் வகையில் ஆதாரக் கல்வி முறையை உருவாக்கினார்.

 

v  ஆதாரக் கல்வி முறையில் ஒவ்வொரு பள்ளியும் தன் சுற்றுப்புறச்சூழலில் உள்ள பொருட்களையும், வளங்களையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

 

v  நூல் நூற்றலுக்கும், நெசவு செய்தலுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

 

v  படிக்கும் போதே குழந்தைகள் உழைத்து குடும்பத்திற்கு வருமானம் தேடித் தரும் வாய்ப்பை உருவாக்குகிறது. இதனால் இக்கல்வி முறை இந்தியாவில் பெரும் பங்கு வகித்தது.

 

v  கல்வியின் குறிக்கோள்களை இறுதியாக்குவதில் கருத்தியல் கொள்கையையும், கற்பிக்கும் பாடப் பொருட்களை நிர்ணயிப்பதில் யதார்த்த வாதத்தையும் கற்பிக்கும் முறையைத் தீர்மானிப்பதில் பயனளவுக் கொள்கையையும் காந்திஜி ஒன்று சேர்த்து தனது கல்வி கொள்கையை உருவாக்கினார்.

 

v  தனது கல்வி கொள்கையை நடைமுறைபடுத்த வார்தா என்னுமிடத்தில் ஒரு பள்ளியை துவக்கி நடத்தினார்.

 

v  ஆதாரக்கல்வித் திட்டம் வார்தா திட்டம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.

 

v  1937ல் காங்கிரஸ் கட்சி 9 இந்திய மாநிலங்களில் அரசு அமைந்தவுடன் வார்தா திட்டத்தை நடைமுறைபடுத்தியது.

 

v  1950ம் ஆண்டு இத்திட்டம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாமல் முடங்கிப்போனது.

 

 

காந்திஜியின் கல்வி சிந்தனைகளும் கல்வி நடைமுறைகளும்

 

v  சுதந்திர இந்தியாவில் இளைஞர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு ஆதாரக் கல்வியினை காந்தியடிகள் உருவாக்கினார்.

 

v  இதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

     

Ø  கல்வியின் இறுதி இலட்சியங்கள்

Ø  கல்வி ஏற்பாடு

Ø  கற்பித்தல் முறை

Ø  கல்வியை திட்டமிடல்

Ø  ஒழுக்கமும்,நன்னடத்தையும்

Ø  ஆசிரியரின் பங்கு

 

காந்தியடிகளது கல்வித்திட்டத்தில் உள்ள முக்கியத்துவம்

 

v  அஹிம்சை நெறிகளுக்குட்பட்ட எந்த ஆதாரத்தொழிலும் ஆதாரத்தொழிலாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

 

v  இத்தொழிலோடு தொடர்புடைய அறிவுச் செய்திகளையும் கற்பிக்க வேண்டும்.

 

v  மாணாக்கர் ஆதாரத் தொழில் சார்ந்த வினாக்களை ஆசிரியரிடம் விவாதித்துக் கற்க வேண்டும்.

 

v  அறிவு புத்தகங்களில் புதைத்து கிடைப்பதாக எண்ணுவது தவறு.அது நம்முள்ளேயே உள்ளது.

 

v  சிந்தித்தல், உரையாடல், கேட்டல், பார்த்தல், படித்தல் போன்றவற்றால் தேவையான அறிவொளி கிடைக்கும்.

 

v  குழந்தைகள் ஆதாரத் தொழிலை ஒரு விளையாட்டாக கருதுவர்.பின் அதனால் வரும் பொருட்களை காணும்போது மட்டற்ற மகிழ்ச்சி அடைவர் என்று கருதுகிறார்.

 

காந்தியடிகளது கல்விதிட்டத்தில் மாணவர் கண்டுபிடிப்புக்கு அளிக்கப்படும் இடம்

 

v  மாணக்கர் ஆதார தொழிலின் மூலமாக புதிய உற்பத்தி முறைகளையும், சிக்கல்களையும் ஆர்வத்துடன் புதிய நுட்பங்களையும் கண்டறிக்கின்றனர்.

 

v  இதனால் அவர்களது ஆர்வம் மேன்மேலும் அதிகமாகிறது. அதன்மூலம் புதிய தகவல்களை கண்டறிகிறார்கள்.

 

காந்தியடிகளது கல்விதிட்டத்தில் உரையாடலின் பங்கு

 

v  உரையாடல் என்பது இரண்டு நபர்களுக்கு இடையே நடக்கும் இரு வழி செய்தி தொடர்பாகும்.

 

v  இது ஒரு குறிப்பிட்டதொரு நூல், நாடகம் அல்லது திரைப்படம் பற்றிய கருத்துப்பரிமாற்றம் போன்றது.

 

v  ஒரு தகவல்களை ஆராய்வதற்கும் சிக்கல்களை தீர்ப்பதற்கும் உதவுகிறது.

 

v  ஒவ்வொரு செயலிலும் கருத்துக்களை கூறவும் வினாக்களுக்கு விடை தேடவும் மாணாக்கன் முயல வேண்டும்.ஆசிரியரின் உதவியை நாட வேண்டும்.

 

v  இவ்வாறு உரையாடலின் பங்கு பற்றி காந்திஜி கூறுகிறார்.

No comments:

Post a Comment

சாலை இளந்திரையன்

  GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி....