Latest Government Jobs and updates

Saturday

TET Study Materials - Part (A) Child Development (Paper 1) Unit 1

 

Teachers Eligibility Test   -   Paper  1

 

(i)             Child Development and  Pedagogy

 

(Relevant to Age 6 – 11)

 

Part (A)  : Child development

 

Unit – I  : The Children’s Profile at the Beginning of Primary Education – Physical and Cognitive.

 

Trends in physical growth (உடல் வளர்ச்சி)

 

v  உடல் வளர்ச்சி என்பது உடலின் உயரம், எடை, எலும்பின் தன்மை, பார்த்தல், கேட்டல் ஆகியவற்றின் வளர்ச்சியினை குறிப்பதாகும்.

 

v  எலும்புக் கூட்டின் வளர்ச்சி, எலும்பின் தன்மையில் வளர்ச்சி போன்றவை உடல்கூறு வளர்ச்சியாகும்.

 

v  பற்கள் முளைப்பதும் உடல் வளர்ச்சி ஆகும்.

 

v  இரத்த ஓட்டப்பகுதி, நரம்பு மண்டலம், சுவாச மண்டலம், தசை பகுதி போன்றவற்றில் எழும் மாற்றம் உடல் வளர்ச்சி ஆகும்.

 

v  கை, கால்கள் போன்றவை வலுப்பெற்று வேகமாக செயல்படுவது உடல் வளர்ச்சி ஆகும்.

 

v  அறிவு வளர்ச்சியும் உடல் வளர்ச்சி ஆகும்.

 

 

v  உடல் வளர்ச்சி இரு வகைப்படும்.

அவை,

      உடல்கூறு வளர்ச்சி (Anatomical Growth)

      உடலியல் வளர்ச்சி (Physiological Growth)

 

v  உடலியக்கத்தின் வளர்ச்சி ( Motor Development)  இரு வகைப்படும்.

அவை,

கையாளும் திறன்கள் ( Manlpulative Skills )

கண்-கை- இணைந்து செயல்பாடல் (Eye- Hand Co-Ordination)

 

Hormonal influences on physical growth

 

v  இப் பருவத்தில் வளர்ச்சி மிக குறைவாக இருக்கும்.ஆனால் சீராக இருக்கும்.

 

v  இப் பருவக் குழந்தைகள் வருடத்திற்கு 3 முதல் 8 கிலோ வரை எடை கூடுவார்கள்.

 

v  இவர்களின் உயரம் ஆண்டிற்கு 5cm வரை உயரும்.

 

v  இப் பருவத்தில் நாடித்துடிப்பு 9௦+15/ நிமிடம் ஆகும்.சுவாசித்தல் 21+3cm/நிமிடம் ஆகும்.இரத்த அழுத்தம்1௦௦/6௦+16/1௦ என்ற நிலையில் காணப்படும்.

 

v  இப் பருவத்தில் உள்ள இரு பாலின குழந்தைகளும் சமமான வளர்ச்சி,பாலியல் முதிர்ச்சி பெற்றிருப்பார்கள்.

 

v  பால் பற்கள் விழுந்து நிலையான பற்கள் வளர தொடங்கும்.

 

v  6 வயதில் மூளையின் எடை நன்கு வளர்ந்து 8% எட்டுகிறது.8 வயதிற்குள் 93% ஆக மாறுகிறது.

 

v  உள் உறுப்புகளான சுவாசப்பை மற்றும் ஜீரண உறுப்புகள் வேகமாக வளர்ந்து சமநிலையை அடைகின்றன.

 

v  இப் பருவத்தில் உடல் வளர்ச்சி மற்றும் புலனியக்க வளர்ச்சியும் நடைபெறுகிறது.

 

v  இப்பருவத்தில் கேட்கும் திறன் முழு வளர்ச்சி அடைகிறது.பார்வை திறன் முழு வளர்ச்சி அடைய சிறிது காலம் தேவைப்படுகிறது.

 

v  இப் பருவத்தினை வளரிளம் பருவத்திற்கு தயாராகக் கூடிய பருவம் என்று அழைக்கப்படுக்கிறது.

 

Development of neurons   Symbolic   thinking and limits of logic, Sensory motor stage, Pre operational stage, Language Development

 

v  எளிய விளையாட்டுகளையும் உடல் திறன்களையும் கற்றல்.

 

v  ஒத்த வயதினருடன் இணைந்து செயல்படல்,படித்தல்,எழுதல் போன்ற திறன்களை வளர்த்தல்.

 

v  ஒழுக்க நெறிகளைக் கற்றல்.

 

v  வாழ்க்கைக்குத் தேவையான கருத்துக்களைக் கற்றல்.

 

v  தவறு செய்தால் தண்டனைக் கிடைக்கும் என்று அஞ்சப்படல்.

 

v  தனது விருப்பம் நிறைவேறினால் மகிழ்ச்சி அடைதல்.

 

v  மொழி என்பது தகவல்களை பிறருக்கு கூறுவதற்கு பெரிதும் உதவுகிறது.இப்பருவத்தில் உள்ள குழந்தைகளுக்கு மொழியானது பெரும் உதவியாக இருக்கின்றது.

 

Influence of home environment, attitude of  family  members on cognitive development of the child

 

v  குழந்தை தனது குடும்பத்தையை முதல் சமூகமாக நினைக்கின்றது.

 

v  பெற்றோர்கள் தங்கள் குழந்தையோடு நெருக்கமான உறவு கொண்டிருப்பதால் குடும்பத்துடன் இணைந்து செயல்படுகின்றனர்.

 

v  குழந்தைகள் தங்கள் பெற்றோர்கள் மூலமே அவர்களது குடும்ப உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர்களை அடையாளம் காண கற்றுக் கொள்கின்றனர்.

 

v  தங்களது குடும்பத்தின் மூலமாக தான் என்ற உணர்வும் அன்றாட பழக்கவழக்கங்களையும் கற்றுக் கொள்கின்றனர்.

 

v  சாப்பிடும்முறை,உடை உடுத்துவது,தூங்குவது,விளையாடுவது போன்றவற்றை தங்கள் குடும்பத்தின் மூலம் கற்றுக் கொள்கின்றனர்.

 

v  குழந்தைகள் தங்கள் பெற்றோர்களிடமிருந்து பேச கற்று கொண்டு அடிப்படை மொழித் திறனை வளர்ந்து கொள்கின்றனர்.

 

v  குழந்தைகள் தங்களை விட வயதில் பெரியவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தங்கள் பெற்றோர்களிடமிருந்து கற்றுக் கொள்கின்றனர்.

 

v  குழந்தைகள் அன்பு,ஒத்துழைப்பு,அதிகாரத்தில் உள்ளோரிடம் மதிப்பும் மரியாதையும் கொண்டிருத்தல், பரிவு, பாசம், சகிப்புத்தன்மை,தன்னலத்தை விட்டுக் கொடுத்தல் போன்ற பண்புகளை தங்களது குடும்பத்தினரிடமிருந்து கற்றுக் கொள்கின்றனர்.

 

v  குழந்தை தனது பாலின பொறுப்புகளையும்,பாலினசார் நடத்தைகளையும் பெற்றோர்கள் கற்று கொடுக்க வேண்டும்.

 

v  குழந்தை தனது அடிப்படைத் திறன்களான வாசித்தல்,எழுதுதல் போன்றவற்றை தங்களது குடும்பத்திலிருந்து கற்று கொள்ளுகின்றனர்.

 

v  குடும்பத்தில் நடக்கும் விழாக்கள்,சமயச் சடங்குகள் போன்றவற்றை குழந்தைகள் கற்றுக் கொள்கின்றனர்.

 

v  கல்வி,நாட்டுப்பற்று,சமய நம்பிக்கை போன்ற மானப்பான்மைகளை பெற்றோர்களிடமிருந்தே குழந்தைகள் கற்றுக் கொள்கின்றனர்.

 

v  குழந்தையின் எதிர் கால வாழ்வியல் முறைக்கு குடும்பம் முக்கிய பங்கு வகிக்கிறது.

 

Identity status and psychological well being

 

v  இப்பருவக் குழந்தைகள் ஒரு பணியில் ஈடுபடுவதற்கு தேவையான உடல் வலிமை வளர்ச்சி பெறுகிறது.

 

v  அவர்களின் திறன்கள் இப்பருவத்தில் வெளிப்பட தொடங்குகிறது.

 

v  தான் ஒரு பெண் அல்லது ஆண் என்பதை அடையாளம் கண்டுக் கொள்ள தொடங்குகின்றனர்.

 

v  கல்வி நிலைகளில், சமூகத்தில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் உள்ள விதிமுறைகள் எதிர்ப்பார்ப்புகளை உணர தொடங்குகின்றனர்.

 

 

No comments:

Post a Comment