Friday

TNPSC Tamil Study Material - Part B- Thirukkural

திருக்குறள் தொடர்பான செய்திகள்


               அன்புடைமை

                        அறத்துப்பால் 

                         அதிகாரம்(8)

                   அறம்: இல்லறவியல்

1.அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.
விளக்கம்: அன்புக்குரியவர்களின் துன்பத்தை பார்த்து நம் கண்களில் கண்ணீராக வெளிபடுவது அன்பு.

2.அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
விளக்கம்: அன்பு இல்லாதவர் எல்லா பொருளும் தனக்குரியது என்று எண்ணுவர்.அன்புஉடையவர் பிறர் துன்பம் அடையும் போது தன் உயிரையும் கொடுத்து உதவுவார்.

3.அன்போடு இயைந்த வழக்குஎன்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.
விளக்கம்: உயிர் கொண்ட உடம்பின் பயன் பிறரிடம் அன்பு செலுத்தவே.அவ்வன்பை நம் வாழ்வில் வளர்ந்து கொள்ள வேண்டும்.

4.அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு.
விளக்கம்: அன்பு என்பது பிறரை நண்பராக்க உதவும்.அந்த அன்பானது இந்த உலகத்தையே தன்வயமாக்கும்.

5.அன்புற்று அமர்ந்த வழக்குஎன்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.
விளக்கம்: உலகத்தில் இன்பமும் சிறப்பும் பெற்று ஒருவன் வாழ்வது அன்பின் பயனே ஆகும்.

6.அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்
மறத்திற்கும்  அஃதே துணை.
விளக்கம்: அன்பு என்பது பகையை வெல்வும்,நட்பை வளர்க்கவும் உதவுகிறது.

7.என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.
விளக்கம்: எலும்பு இல்லாத புழுக்கள் வெயிலில் அழிவது போல அன்பில்லாதவர்களும் அழிவர்.

8.அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரம்தளிர்த் தற்று.
விளக்கம்: பாலை நிலத்தில் வாடிபோன மரம் தளிர்க்காது.அதுபோல அன்பு இல்லாத மனிதர் வாழ்த்தும் வாழாதவர்களாக கருதப்படுவர்.

9.புறத்துறப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.
விளக்கம்: அன்பு இல்லாதவர்களுக்கு மெய்,வாய்,கண்,மூக்கு,செவி ஆகியவை இருந்தும் பயன்இல்லை என்பதாம்.

10.அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
விளக்கம்: அன்பு உடையவரை உயிர் உள்ளவராக கருதுவர்.அன்பு இல்லாதவரை பிணமாக கருதுவர்.

No comments:

Post a Comment

கலாப்ரியா

GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி.சு...