Thursday

கல்யாண்ஜி

GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன் – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.

கல்யாண்ஜி

இயற்பெயர் : எஸ். கல்யாணசுந்தரம்  

புனைபெயர் : வண்ணதாசன், கல்யாண்ஜி   

பிறந்த ஊர் : திருநெல்வேலி

காலம் : 1946

படைப்புகள் : தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள், கலைக்க முடியாத ஒப்பனைகள், அந்நியமற்ற நிதி, ஆதி, புலரி, இன்று ஒன்று நன்று, சின்னு முதல் சின்னு வரை, கல்யாண்ஜி கவிதைகள்,மணலுள்ள ஆறு, முன்பின், சமவெளி, பெயர் தெரியாமல் ஒரு பறவை, மனுஷா மனுஷா, நடுகை, கனிவு, ஒளியிலே தெரிவது, அணில்நிறம், கனியான பின்னும் நுனியில் பூ, பற்பசைக் குழாய்களும் நாவல் பழங்களும், சிநேகிதங்கள், கிருஷ்ணன் வைத்த வீடு, உயரப் பறத்தல்.  

குறிப்பு :

Ø  இவர் வண்ணதாசன் என்ற புனைப் பெயரை சிறுகதைகளுக்கும் கல்யாண்ஜி என்ற புனைப் பெயரை கவிதைகளுக்கும் பெற்றார்.

Ø  இவர் தீபம் என்ற இதழை நடத்தியுள்ளார்.

Ø  இவருடைய தந்தை தி.க.சிவசங்கரன் சாகித்திய அகாடமி விருதுப் பெற்ற ஒரு சிறந்த எழுத்தாளர் ஆவார்.

Ø  இவர் அகம் புறம் என்ற கவிதை தொகுப்பு ஆனந்த விகடனில் இடம்பெற்றுள்ளது.

Ø  இவர் வண்ணதாசன் கடிதங்கள் என்ற கடித இலக்கியத்தையும் படைத்துள்ளார்.

Ø  இவர் கலைமாமணி விருதும் பெற்றுள்ளார்.

Ø  இவருக்கு 2016 ல் விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டது.

Ø  இவருடைய ஒரு சிறு இசை என்ற நூலுக்கு 2016 ல் சாகித்திய அகாடமி விருது கிடைத்துள்ளது.      

மேற்கோள் :

v  உன் பாடல்களை நீயே எழுது………………………….

No comments:

Post a Comment

தேவதேவன்

  GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி....