Friday

TNPSC Daily Current affairs 2024 - Tamil Nadu News

 TNPSC Daily Current affairs 2024

Tamil Nadu News

August

1/8/2024

v  தமிழ்நாட்டில் சிவகங்கையில் உள்ள எழந்தங்கரை என்ற இடத்தில் வானியல் சார் தொல்லியல் தளம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

Ø  இது வானியல் பற்றி ஆய்வு செய்யும் இடம் மற்றும் பழைய காலத்தில் மக்கள் வானியல் பற்றிய அறிவை கொண்டிருந்தனர் என்பதும் தெரிய வருகிறது. 

v  மேட்டூர் அணை இந்த மாதம் ஆகஸ்ட் 21 ல் நூற்றாண்டை கடக்க உள்ளது.

Ø காவிரி ஆற்றின் நடுவே சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணை 1925 ஆம் ஆண்டு துவங்கி  1934 ஆம் ஆண்டு கர்னல் W.M எல்லீஸ் கட்டிமுடிக்கப்பட்டது.

Ø இந்த அணையின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 12 மாவட்டங்கள் நீர் பாசன வசதி பெறுகிறது. 

v ஆகஸ்ட் 9 ல் கோவையில் தமிழ் புதல்வன் திட்டம் தொடங்க உள்ளது.

Ø  பெண் குழந்தைகளுக்குப் இருக்கும் புதுமைப் பெண் திட்டம் போல இந்த தமிழ்ப் புதல்வன் திட்டம் அரசுப் பள்ளிகளில் படித்த  6 முதல் 12 வரை படித்து இப்போது உயர்கல்வி படிக்கும் ஆண் குழந்தைகளுக்கு மாதந்தோறும் ₹1,000 உதவி வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

கலாப்ரியா

GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி.சு...