Friday

ந.பிச்சமூர்த்தி

GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன் –தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.

ந.பிச்சமூர்த்தி

இயற்பெயர் : ந. வேங்கட மகாலிங்கம்  

பிறந்த ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்  

காலம் : 15/8/1900 – 4/12/1976

புனைபெயர்கள் : பிச்சு, ந. பி

படைப்புகள் : கிளிக்குஞ்சு, பூக்காரி, வழித்துணை, பிச்சமூர்த்திக் கவிதைகள், காட்டுவாத்து, வழித்துணை, புதுக்குரல்கள்.   

குறிப்பு : 

Ø  இவரை புதுக்கவிதையின் விடிவெள்ளி என்றும் புதுக்கவிதையின் பிதாமகன் என்றும் அழைபர்.

Ø  இவர் மணிக்கொடிக்காலம் எழுத்துக்காலம் போன்ற இருகாலத்திலும் புதுக்கவிதைகளைப் படைத்துள்ளார். 

Ø  இவர் வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார் மற்றும் கோவில் நிர்வாக அலுவலராகவும் பணிச் செய்துள்ளார்.

Ø  இவர் நவஇந்தியா என்ற பத்திரிக்கையில் துணை ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.

Ø  இவர் கதைகள், மரபுக்கவிதைகள், புதிக்கவிதைகள், ஓரங்கநாடகங்கள் போன்றவற்றை எழுதும் பணியை செய்துள்ளார்.

Ø  இவருடைய முதல் சிறுகதை விஞ்ஞானத்திற்குப் பலி இது கலைமகளில் வெளிவந்துள்ளது.

Ø  இவருடைய முதல் கவிதை காதல் இது 1934 ம் ஆண்டு வெளிவந்துள்ளது. இதனை பிக்க்ஷி என்ற புனைப்பெயரில் எழுதியுள்ளார்.  

Ø  இவருடைய முதல் ஓரங்க நாடகம் புதுமைப் பெண் என்பது இது கலைமகள் பத்திரிக்கையில் வெளிவந்தது.  

Ø  இவர் முதலில் சிறுகதை எழுத்தாளராக அறிமுகம் ஆகி பின் புதுக்கவிதைக்கு வந்துள்ளார்.

Ø  இவர் முதன்முதலில் ஆனந்தா என்ற சிறுகதையை மணிக்கொடியில் வெளியிட்டுள்ளார்.  

Ø  குடும்ப இரகசியம் என்ற குறுநாவலை கலைமகளில் வெளியிட்டுள்ளார்.  

Ø  ஹனுமான், நவ இந்தியா போன்ற இதழ்களில் பணியாற்றியுள்ளார்.

Ø  பாரதிக்கு பிறகு கவிதை வடிவில் திருப்பம் கொண்டு வந்தது இவருடைய படைப்புகள் ஆகும்.

Ø  இவர் வால்ட்விட்மன், பாரதி போன்றவரை முன்னோடியாக வைத்து திகழந்தவர்.

Ø  இவருடைய காட்டுவாத்து என்ற கவிதை தொகுப்பு 35 கவிதைகளைக் கொண்டது ஆகும்.

Ø  கலைமகள் என்ற பத்திரிக்கையில் சிறுகதை ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.

Ø  இவரது முள்ளும் ரோசாவும் என்ற சிறுகதை கலைமகள் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது.

Ø  மணிக்கொடி, கலாமோகினி, கிராம ஊழியன் போன்ற இதழ்களில் கவிதை எழுதியுள்ளார்.

Ø  இவருடைய கிளிக்கூண்டு என்ற கவிதை தினமணிக்கதிரில் வெளிவந்துள்ளது. அதே சமயம் மணிக்கொடியில் ஊர்க்குருவி என்ற கவிதையும் வெளியாகி இருந்தது.

Ø  இவருடைய உயிர்மகள் என்ற காவியம் அகலிகை என்ற கதைக்கு புத்துயிர் கொடுத்து எழுதப்பட்டது ஆகும்.

Ø  இவரது எழுத்துநடையை வருணித்து கூறியவர் தி. க. சிவசங்கரன்.  

Ø  இவர் குழந்தைகளுக்கு என்று 10 கதைகளின் தொகுப்பை “காக்கையும் கிளிகளும்“என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார்.                     

மேற்கோள் :

v  வாழ்க்கையும் காவிரி அதிலெங்கும் கிளிக்கூண்டு………….

v  முண்டி மோதும் துணிவே இன்பம்…………

No comments:

Post a Comment

கலாப்ரியா

GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி.சு...